சமையல் அறைஎன்றாலே ஞாபகம் வருவது பெண்மணிகளின் சமையல்தான் ஆனாலும் தற்போது பார்க்கப்போனால் அதிகமாக ஆண்கள்தான் பெண்களைவிட அதிகமாக நேரத்தை சமயல் அறையில் செலம்விடுகின்றார்களாம்..!என்ன அதிர்ச்சியாக இருக்கா...! ஆமாங்க அதுதான் உண்மை
பிரித்தானியாவில் 3000 ஆண், பெண் இருபாலரையும் ஆய்வுக்குட்படுத்திப்பார்த்ததில்தான் அந்த உண்மை புலப்பட்டிருக்கிறது.
ஒரு நாளில் மெத்தமாக 6 மணித்தியாலங்களும் 52நிமிடங்களும் பெண்கள் சமையல்அறையில் செலவிடுகின்றார்களாம் ஆனாலும் ஆண்களை பார்க்கப்போனால் ஒரு நாளிலே 7 மணித்தியாலங்களும் 6நிமிடங்களும் சமையல்அறையில் செலவாகிறதாம்.
ஆனாலும் இதில் குறிப்பிடவேண்டியது என்னவெண்றால்... பெண்கள் சமையல் அறையில் உணவுதயாரிப்பிலும், வேசிங் மெசினில் உடைகள் போட்டுஎடுப்பதிலுமே அவர்களது நேரம் செலவாகிறதாம்.
ஆனாலும் ஆண்களை பார்க்கப்போனால் உணவு தயாரிப்பதைவிட உணவினை உட்கொள்ளுவது, மனைவிக்கு உதவிசெய்வது, உணவினை பார்சல் பண்ணுவது அதனோடு ஆண்கள் அதிகமாக ஓய்வெடுப்பதும் சமையல் அறையில்தானாம். மெத்தத்தில் பார்க்கபோனால் சமையலை தவிர வேறுதேவைகளினால்தான் ஆண்கள் அதிகநேரத்தை சமையல் அறையில் செலவுசெய்கிறார்கள்.
மெத்தத்தில் பார்க்கப்போனால் ஒரு வருடத்திலே ஆண்கள் 15வாரங்களும் 2நாட்களும் சமையல் அறையில்தான் களிக்கின்றார்கள்.
