Friday, October 1, 2010

எந்திரன் தமிழ் சினிமாவின் புதிய பரிமாணம் – விமர்சனம்

ஷங்கர் ரஜனி ஐஸ்வர்யா ரஹ்மான் ரசூல் இவை எல்லாவற்றையும் விட கலாநிதிமாறன்! மக்களின் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை விழைவித்த திரைப்படம். பலரின் எதிர்பார்ப்பும் வீண்போகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மக்களின் உற்சாகம்! அது பிரமிப்போ பிரமிப்பு!

புதிய மனிதா பாடலுடன் எழுத்தோட்டமும் வர ஆரம்பிக்கின்றது ஷங்கரின் ரோபோ. ஆய்வு கூடத்தில் ரோபோவை வடிவமைத்து அதன் செயற்பாடுகளுக்கு வடிவம் கொடுக்கின்றார் விஞ்ஞானி ரஜனி. உதவியாளர்கள் கருணாஸ் மற்றும் சந்தானம். ஆய்வு கூடத்தில் ரோபாவின் பாகங்களைப் பொருத்துவதற்கு உதவுவது தான் அவர்களின் வேலை! ஆனால் படித்தது MSC COMPUTER SCIENCE…!. ஆய்வுகூடத்தில் கோப்பி மற்றும் தண்ணீர் பரிமாறுவதிலிருந்து அனைத்தையும் ரோபோக்களே...மேலும்...

Friday, September 17, 2010

என்ன ஜீவா இது, போகும் போது சொல்லிட்டுப் போகமாட்டீங்களா!



கோ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் பெரும்பாலும் முடிவடைந்திருக்கின்றன. இந்த நிலையில் தன்னுடைய அடுத்த திரைப்படமான வந்தான் வென்றான் திரைப்படத்திற்கு தனது கால்ஷீட்டை ஒதுக்கியிருந்தார் ஜீவா.

வந்தான் வென்றான் படப்பிடிப்பிற்காக இயக்குனர் கண்ணன் தொழில்நுட்பக்குழுவினர் மற்றும் நாயகி தபசி ஆகியோர் கோயம்புத்தூரில் முகாமிட்டு இருக்கின்றனர். இந்த வேளையில் தான் ஜீவா எங்கே என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. மேலும்

Wednesday, September 15, 2010

தனுஷின்அண்ணி இப்போ சிம்புவுடன்…!

சோனியா அகர்வால் தனுஷின் அண்ணன் செல்வராகவனின் பஞ்சாப் கண்டுபிடிப்பு, அதுமாத்திரமன்றி பிளவு ஏற்படும் வரையில் செல்வராகவனின் ஆஸ்தான நாயகியாக இருந்தவரும் சோனியாதான்.

திருமணத்தில் முடிந்த உறவு நெடுநாட்கள் நிலைக்கவில்லை இருவரும் பிரிவதில் மனம் ஒத்துப்பொய் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்,

Friday, September 10, 2010

செல்லபிராணியாக முதலை...!


மேற்குலகில் நடக்கும் சில சம்பவங்கள் கீழைத்தேயர்களிற்கு ஆச்சரியமூட்டும் வகையில் அமைந்திருக்கும் அனாலும் மேற்கத்தயவர்களிற்கு அது சர்வசாதாரணமே...! 

இப்படித்தான் பிரித்தானியாவில் ஓர் பெண் தனது 16 வயது பையனுடன் சேர்த்து செல்லப்பிராணியாக முதலையினை வளர்த்துவருகிறார். அதுவும் ஒன்று இரண்டல்ல மூன்று முதலைகளை செல்லப்பிராணியாக அதிக பாசத்துடன் வளர்த்து வருகின்றார். 

இவரது பெயர் விக்கி 53வயது கொண்ட இவர்..........மேலும் தொடர இங்கே அழுத்துங்கள்…..

Thursday, September 9, 2010

அதிகம் குண்டானவர்கள் பெண்களே…!

உலகிலேயே அதிகம் பருமனானவர்கள் வாழ்வது ஐரோப்பவில்தான், ஐரோப்பாவில் காணப்படும் உணவுப்பழக்கவளக்கம், அவர்களது உணவு உண்ணும் முறை, அவர்கள் செய்யும் வேலை என்பனவே அதற்கு முக்கியகாரணமாக அமைந்திருக்கின்றன.

இந்த நிலையில் அண்மையில் பிரித்தானியாவில் மேற்கொண்ட ஆய்வில் இப்படி பருமனானவர்களில் அதிகமானவர்கள் பெண்களே என்ற முடிவு எட்டப்பட்டிருக்கிறது.

சாதாரணமாக பிரித்தானியாவில் பத்து பெண்களை தெரிவுசெய்தால் அதில் நான்கு பேர் அதிக எடை கொண்டவர்களாக இருப்பர் என்று........மேலும் தொடர்ந்து படிக்க...

Tuesday, September 7, 2010

ரஜனி எந்திரனுக்கு அடுத்து பாட்சா – 2........!!

“எந்திரன்”, ரிலீசுக்கு தயாராகிறது. தொடர்ந்து “சுல்தான் தி வாரியர்” அனிமேஷன் படமும் வருகிறது. இப்படத்தை ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கி உள் ளார். இருபடங்களிலும் நடித்து முடித்து டப்பிங்கும் பேசி விட்டார்.

எனவே ரஜினியின் அடுத்த முடிவு என்ன என்று பரபரப்பாக எதிர் பார்க்கப்படுகிறது. ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர் கள் விரும்புகின்றனர். ஒவ்வொரு படம் ரிலீசாகும் போதும் இதனை அவர்கள் வற்புறுத்துவது உண்டு.

Tuesday, August 31, 2010

அஜித்தின் கதையில் சூரியா

விண்ணைதாண்டி வருவாயாவினை தெடர்ந்து கௌத்தம் வாசுதேவ மேனனின் அடுத்த படமாக அமைந்நிருந்தது அஜித்தின் 50வது திரைப்படம்தான்.

கார்ரேசில் காட்டிய ஆர்வத்தினால் குறித்த தேதியில் வராமல் அஜித் தாமதிக்க இருவருக்குமிடையில் புகைக்கதெடங்கியது பிரச்சனை,

இதைத்தெடர்ந்து அஜித் தனது 50வது படமாக மங்காத்தாவினை அறிவிக்க கடுப்பாகிபோன கௌத்தம் சரமாரியாக அஜித்மீது வசைபாட தெடங்கிவிட்டார்.

அத்துடன் மட்டுமின்றி தான் அஜித்திற்காக வேட்டையாடு விளையாடு ஸ்டைலில் உருவாக்கிவைத்திருந்த கதையினை இப்போது சூர்யாவினை கொண்டு மேலும்.....

Monday, August 30, 2010

தீபாவளிக்கு வெடிக்குமா விக்ரமின் வெடி...!

தீபாவளி என்றாலே ஞாபகத்திற்கு வருவது வெடி வெடிப்பதுதான்.

இப்படி இருக்கையில் படத்திற்கு வெடி என்று தலைப்பு வைத்துவிட்டு தீபாவளி அன்று திரையிடாவிட்டால் எப்படி...? இப்படியாக புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறது விக்ரமின் நடிப்பில் பூபதி பாண்டியனின் இயக்கத்தில் வளர்ந்துவரும் "வெடி".

இந்த தீபாவளியை பொறுத்தவரை மிகப்பெரிய இரண்டு நட்சத்திர திரைப்படங்கள் வெளிவரதயாரக இருக்கின்றன. முதலாவது உலகனாயகனின் "மன்மத அம்பு" மற்றயது இளய தளபதியின் "காவல்காரன்".

இந்த இரன்டுடனும் வீனாக எதற்கு மோதுவான் என்று இயக்குனரும் தயாரிப்பாளரும் கேட்க விக்ரமோ "வெடி என்று பெயர் வைத்துவிட்டு தீபாவளி அன்று வெளியிடாவிட்டால் நன்றாகவா இருக்கும்"...........

Monday, August 23, 2010

புகைத்தல் நாட்டிற்கு நன்மையா தீமையா..?

ஒரு நாட்டிலே அவ்வருடத்திற்கான வரவுசெலவுதிட்டத்தில் துண்டுவிழும் தொகை அதிகரித்துவிட்டால் அரசாங்கம் உடனடியாக அதிகரிக்கும் தீர்வை இந்த மதுபான மற்றும் புகைத்தல் பொருட்கள் மீதான தீர்வையினைத்தான்.

மதுபானம் மற்றும் புகைப்பொருட்களிற்கான வரியினை அதிகரித்தால் யாரும் எதிர்ப்பு கூறமுடியாது அத்துடன் என்னதான் வரி அதிகர்த்தாலும் விலை கூடினாலும் வாடிக்கையாளர்கள் இப்பொருட்களை வாங்குவதை குறைக்கமாட்டார்கள்.

எனவே ஒருநாட்டின் பொருளாதாரத்தில் இவ் மதுபானம் மற்றும் புகைத்தல்பொருட்கள் செலுத்தும் தாக்கம் அளப்பெரியது. இப்படியாக பொருளாதாரத்தில் நன்மை செய்தாலும் இதன் பாவனையாளர்களிற்கு இப்பாவனை மூலம் கிடைப்பது தீமைகளே.

கீழைத்தேய நாடுகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது மேற்குலக நாடுகளில் இந்த புகைத்தல் பழக்கம் என்பது மிக அதிகமே, ஆண்கள் பெண்கள் என்ற பேதமின்றி இருபாலாரும் இப்பழக்கத்திற்கு அடிமையானவர்களே,

அதுமட்டுமன்றி கணவனுடன் சேர்ந்து மனைவியும், தந்தையுடன் சேர்ந்து மகனும் புகைக்கும் கண்கொள்ளாகாட்சிகள் மேற்குலகத்தில் சர்வசாதாரணம். இந்த நிலையில் கட்டுக்கடங்காத இந்த புகைப்பழக்கத்தினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் இங்கு....

(மேலும் விபரங்களிற்கு இங்கே அழுத்தவும்)

Tuesday, August 17, 2010

எமியைக் கண்டுகொண்ட இலண்டன்

இங்கிலாந்திலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் இதுவரையிலும் இலண்டனில் யாருக்கும் தெரியாத முகம், ஆனாலும் ஒரே இரவில் தென்னிந்தியாவின் கனவுக்கன்னி...! இப்படி நாங்கள் வர்ணிக்கும் போதே சட்டென்று நீங்கள் கண்டுகொள்வீர்கள் நாங்கள் யாராப்பற்றிக் கூறப்போகின்றோம் என்று.

"தமன்னா, ஸ்ரேயா எல்லாம் பழசு மச்சி இப்ப லேட்டஸ்டு யாருன்னா அது நம்ம எமிதான்னு" சொல்லும் இளைஞர்கூட்டம்தான் இப்போது அதிகம்.
மதராசப்பட்டினம் என்னும் ஒரே படத்தில் தமிழ் நெஞ்சங்களையெல்லாம் கொள்ளைகொண்டுவிட்டார் இந்த இங்கிலாந்து அழகுச்சிலை.

சிலருக்கு அழகு இருந்தால் நடிப்பு வராது, சிலர் நன்றாக நடித்தாலும் சைட்டடிக்க கூடியதாய் அமையாது இந்த இரண்டும் ஒன்று கூடியதென்றால் ஐசுவிற்கு பின் எமிஜக்சனுக்குதான் என்று தமிழ் இயக்குனர்களே சொல்லுமளவிற்கு அணைவரையும் ஒரே படத்தில் கொள்ளையடித்துவிட்டார் இவர்.

இப்படியாக தமிழர்வாழம் பகுதிகளை அணைத்திலும் புகழ்பெற்றிருந்தும் எமியின் சொந்த நாட்டில் எமி டீனேஜ் இங்கிலாந்து அழகியாக தெரிவாகியிருந்த போதும் யாருக்கும் பரிச்சயமில்லை.

மதராசப்பட்டினம் இங்கிலாந்து Box Officeஇன் பத்துக்குள் வந்ததை அடுத்தே....

Monday, August 16, 2010

அரவாணி கதையே "அவன் இவன்"

இயக்குனர் பாலாவினைப்பொறுத்தவரையில் மற்றய இயக்குனர்கள் தங்கள் கனவிலும் கற்பனைசெய்யாத கதாபாத்திரங்களையே தனது கதையின் நாயகனாக உருவகிப்பது வழமை.

இதனடிப்படையில் சேதுவில் விக்ரமின் மனநிலைபாதித்த கதாபாத்திரமாகட்டும், நந்தா சூரியாவாகட்டும், பிதாமகன் விக்ரமின் சுடலைக்காப்பாளனாகட்டும், இறுதியாக வந்த நான் கடவுளில் ஆர்யாவின் அகோரி வேடமாகட்டும் தமிழ்சினிமாவில் அக்கதாபாத்திரங்கள் முதன்மையானவையே.

இப்போது வேகமாக பாலா இயக்கிவரும் "அவன் இவன்" திரைப்படமும் வேறுபட்ட புதுமைக் கதைக்களமே, அண்ணன் தம்பிகளிற்கிடையான கதைக்களமாக இருந்தாலும் இதில் தம்பியாக நடிக்கும் விஷால் ஆணாக இருந்தபோதும் அதிக பெண்மைத்தன்மை கொண்டவராக அவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு அண்ணன் தனது தம்பி ஆரவாணி என தெரியும் பட்சத்தில் எப்படி தன்தம்பியுடன் சகோதரத்தன்மையை பேணுவான்...

இலண்டன் பிச்சைக்காரன்

எந்தவெரு கீழைத்தேய நாட்டவருக்கும் மேலைத்தேய நாடுகள் மீது ஒரு மோகம் இருந்துகொண்டே இருக்கும்,

"என்ன என்டாலும் வெளிநாட்டைபோல வராது" என்று கூறுபவர்களை தினசரி நாங்கள் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.

ஏன் இந்த மோகம்..! எதற்காக இப்படியாக கொள்கை..! உருவாகியது என்று பார்ப்போமானால் மேற்குலகநாடுகளில் காணப்படுகின்ற வசதிவாய்ப்புக்கள்தான் இந்த மாயயை உருவாக்கியிருந்தன.

ஆனாலும் எப்போது அமெரிக்கா பொருளாதார சரிவை எதிர்கொண்டதோ அன்றிலிருந்து மேற்சொன்ன மாயை மேற்குலகிலிருந்து இப்போது மறைய ஆரம்பித்திருக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும்.

இதற்கு சாட்சியாகதான் இப்போது மேற்குலக உச்சானி நாடான இங்கிலாந்தில் அதிகரித்திருக்கும் பிச்சைக்காரர்களை எடுத்துக்கொள்ளலாம்.

"...என்னது இலண்டனில் பிச்சைக்காரர்களா...!" என்று நீங்கள் சந்தேகப்படுவது ஞாயமானதுதான் ஆனாலும்...

Sunday, August 15, 2010

ஐஸ்வர்யா மறுத்ததற்கு காரணம் என்ன?



ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி. இன்று இந்தியாவைப் பொறுத்தவரையில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க பிரபலங்கள் தங்கள் தங்கள் பாணியில் கொண்டாட்டங்களில் ஈடுபட கோடம்பாக்க பகுதியில் மட்டும் சிறு குசுகசுப்பு. வேறு எவரைப் பற்றியுமல்ல எங்கள் ரோபோ நாயகி ஐசுவைப் பற்றித் தான்.

தமிழ் திரையுலகின் நடிகர் சங்கத்தில் சேர்வதற்கு இன்றைய தினம் தான் இறுதிதினமாக காலக்கெடு விதித்திருந்தார் ராதாரவி. இதனைத் தொடர்ந்து பலநடிகர் நடிகையரும் அடித்து பிடித்து நேற்றைய தினம் வந்து இணைந்திருக்கின்றனர்.

களவாணி ஓவியா பானாகாத்தாடி சமந்தா வேலாயுதம் ஹன்சிகா ஜெனிலியா என்றவாறு இந்தப்பட்டியல் சென்றிருக்கின்றது. ஆனால் ஐசுவுக்காக யாரும் விண்ணப்பப்படிவம் வாங்கியதாகவோ ஐசு வந்து இணைந்ததாகவோ செய்திகள் வெளியாகவில்லை.

எந்திரன் பாடல் வெளியீட்டு விழாவில் கூட பலர் சேரும் படி அறிவுறுத்தியும் இன்னமும் சேராததற்கான காரணம் பற்றி பலராலும் பேசப்பட்டது. மும்பாயில் பாடல் வெளியீட்டில் பரபரப்புத்தன்மை தான் காரணமா அல்லாவிடில் மேலும்