Friday, October 1, 2010

எந்திரன் தமிழ் சினிமாவின் புதிய பரிமாணம் – விமர்சனம்

ஷங்கர் ரஜனி ஐஸ்வர்யா ரஹ்மான் ரசூல் இவை எல்லாவற்றையும் விட கலாநிதிமாறன்! மக்களின் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை விழைவித்த திரைப்படம். பலரின் எதிர்பார்ப்பும் வீண்போகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மக்களின் உற்சாகம்! அது பிரமிப்போ பிரமிப்பு!

புதிய மனிதா பாடலுடன் எழுத்தோட்டமும் வர ஆரம்பிக்கின்றது ஷங்கரின் ரோபோ. ஆய்வு கூடத்தில் ரோபோவை வடிவமைத்து அதன் செயற்பாடுகளுக்கு வடிவம் கொடுக்கின்றார் விஞ்ஞானி ரஜனி. உதவியாளர்கள் கருணாஸ் மற்றும் சந்தானம். ஆய்வு கூடத்தில் ரோபாவின் பாகங்களைப் பொருத்துவதற்கு உதவுவது தான் அவர்களின் வேலை! ஆனால் படித்தது MSC COMPUTER SCIENCE…!. ஆய்வுகூடத்தில் கோப்பி மற்றும் தண்ணீர் பரிமாறுவதிலிருந்து அனைத்தையும் ரோபோக்களே...மேலும்...

Friday, September 17, 2010

என்ன ஜீவா இது, போகும் போது சொல்லிட்டுப் போகமாட்டீங்களா!



கோ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் பெரும்பாலும் முடிவடைந்திருக்கின்றன. இந்த நிலையில் தன்னுடைய அடுத்த திரைப்படமான வந்தான் வென்றான் திரைப்படத்திற்கு தனது கால்ஷீட்டை ஒதுக்கியிருந்தார் ஜீவா.

வந்தான் வென்றான் படப்பிடிப்பிற்காக இயக்குனர் கண்ணன் தொழில்நுட்பக்குழுவினர் மற்றும் நாயகி தபசி ஆகியோர் கோயம்புத்தூரில் முகாமிட்டு இருக்கின்றனர். இந்த வேளையில் தான் ஜீவா எங்கே என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. மேலும்

Wednesday, September 15, 2010

தனுஷின்அண்ணி இப்போ சிம்புவுடன்…!

சோனியா அகர்வால் தனுஷின் அண்ணன் செல்வராகவனின் பஞ்சாப் கண்டுபிடிப்பு, அதுமாத்திரமன்றி பிளவு ஏற்படும் வரையில் செல்வராகவனின் ஆஸ்தான நாயகியாக இருந்தவரும் சோனியாதான்.

திருமணத்தில் முடிந்த உறவு நெடுநாட்கள் நிலைக்கவில்லை இருவரும் பிரிவதில் மனம் ஒத்துப்பொய் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்,

Friday, September 10, 2010

செல்லபிராணியாக முதலை...!


மேற்குலகில் நடக்கும் சில சம்பவங்கள் கீழைத்தேயர்களிற்கு ஆச்சரியமூட்டும் வகையில் அமைந்திருக்கும் அனாலும் மேற்கத்தயவர்களிற்கு அது சர்வசாதாரணமே...! 

இப்படித்தான் பிரித்தானியாவில் ஓர் பெண் தனது 16 வயது பையனுடன் சேர்த்து செல்லப்பிராணியாக முதலையினை வளர்த்துவருகிறார். அதுவும் ஒன்று இரண்டல்ல மூன்று முதலைகளை செல்லப்பிராணியாக அதிக பாசத்துடன் வளர்த்து வருகின்றார். 

இவரது பெயர் விக்கி 53வயது கொண்ட இவர்..........மேலும் தொடர இங்கே அழுத்துங்கள்…..

Thursday, September 9, 2010

அதிகம் குண்டானவர்கள் பெண்களே…!

உலகிலேயே அதிகம் பருமனானவர்கள் வாழ்வது ஐரோப்பவில்தான், ஐரோப்பாவில் காணப்படும் உணவுப்பழக்கவளக்கம், அவர்களது உணவு உண்ணும் முறை, அவர்கள் செய்யும் வேலை என்பனவே அதற்கு முக்கியகாரணமாக அமைந்திருக்கின்றன.

இந்த நிலையில் அண்மையில் பிரித்தானியாவில் மேற்கொண்ட ஆய்வில் இப்படி பருமனானவர்களில் அதிகமானவர்கள் பெண்களே என்ற முடிவு எட்டப்பட்டிருக்கிறது.

சாதாரணமாக பிரித்தானியாவில் பத்து பெண்களை தெரிவுசெய்தால் அதில் நான்கு பேர் அதிக எடை கொண்டவர்களாக இருப்பர் என்று........மேலும் தொடர்ந்து படிக்க...

Tuesday, September 7, 2010

ரஜனி எந்திரனுக்கு அடுத்து பாட்சா – 2........!!

“எந்திரன்”, ரிலீசுக்கு தயாராகிறது. தொடர்ந்து “சுல்தான் தி வாரியர்” அனிமேஷன் படமும் வருகிறது. இப்படத்தை ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கி உள் ளார். இருபடங்களிலும் நடித்து முடித்து டப்பிங்கும் பேசி விட்டார்.

எனவே ரஜினியின் அடுத்த முடிவு என்ன என்று பரபரப்பாக எதிர் பார்க்கப்படுகிறது. ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர் கள் விரும்புகின்றனர். ஒவ்வொரு படம் ரிலீசாகும் போதும் இதனை அவர்கள் வற்புறுத்துவது உண்டு.

Tuesday, August 31, 2010

அஜித்தின் கதையில் சூரியா

விண்ணைதாண்டி வருவாயாவினை தெடர்ந்து கௌத்தம் வாசுதேவ மேனனின் அடுத்த படமாக அமைந்நிருந்தது அஜித்தின் 50வது திரைப்படம்தான்.

கார்ரேசில் காட்டிய ஆர்வத்தினால் குறித்த தேதியில் வராமல் அஜித் தாமதிக்க இருவருக்குமிடையில் புகைக்கதெடங்கியது பிரச்சனை,

இதைத்தெடர்ந்து அஜித் தனது 50வது படமாக மங்காத்தாவினை அறிவிக்க கடுப்பாகிபோன கௌத்தம் சரமாரியாக அஜித்மீது வசைபாட தெடங்கிவிட்டார்.

அத்துடன் மட்டுமின்றி தான் அஜித்திற்காக வேட்டையாடு விளையாடு ஸ்டைலில் உருவாக்கிவைத்திருந்த கதையினை இப்போது சூர்யாவினை கொண்டு மேலும்.....