Tuesday, September 7, 2010

ரஜனி எந்திரனுக்கு அடுத்து பாட்சா – 2........!!

“எந்திரன்”, ரிலீசுக்கு தயாராகிறது. தொடர்ந்து “சுல்தான் தி வாரியர்” அனிமேஷன் படமும் வருகிறது. இப்படத்தை ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கி உள் ளார். இருபடங்களிலும் நடித்து முடித்து டப்பிங்கும் பேசி விட்டார்.

எனவே ரஜினியின் அடுத்த முடிவு என்ன என்று பரபரப்பாக எதிர் பார்க்கப்படுகிறது. ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர் கள் விரும்புகின்றனர். ஒவ்வொரு படம் ரிலீசாகும் போதும் இதனை அவர்கள் வற்புறுத்துவது உண்டு.


வெளி மாவட்டங்களில் ரசிகர்கள் தனிக்கட்சி துவங்கி கொடியும் அறிமுகம் செய்தனர். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கப்பட்டனர். ரஜினி உடனடியாக அரசியலில் ஈடுபடும் முடிவில் இல்லை என்று தெரிகிறது. எனவே மீண்டும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது படங்கள் ரிலீசாகும் போது புதுப்படங்களில் நடிப்பதற்கு 6 மாதம் இடை வெளி விடுவது உண்டு. எனவே “எந்திரன்”, “சுல்தான் தி வாரியர்” படங்கள் வந்த பிறகு 6 மாதங்கள் கழித்து புதுப் படத்தில் நடிக்கிறார்.

அடுத்து அவர் நடிக்க இருப்பது “பாட்சா பாகம்-2” என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அவர் நடித்த பாட்சா படம் 1995-ல் பொங்கல் பண்டிகை அன்று ரிலீசாகி வசூலில் சாதனை படைத்தது. அப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கின. சுரேஷ்கிருஷ்ணா இயக்கினார். அதன் 2-ம் பாகத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என்று பலர் யோசனை தெரிவித்தனர். அதனை ரஜினி ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment